top of page
Search

வெண்ணிலா , அஞ்சாதே ! கல்லார்க்கும் , இது நல்ல தருணம் ! ஒருமையுடன் அன்பெனும் பெருவெளி ! அருட்பெருஞ்சோதி !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Feb 1, 2024
  • 3 min read

ree
ree

அக்டோபர் 2 2011 , என் வாழ்வில் மறக்க இயலாத நாள் , எங்கள் வீட்டிலிருந்து 8 பேர் , அருண் எக்ஸெல்லோ நவராத்திரி பாட்டுக்கச்சேரி சென்று , அங்கே கர்நாடக சங்கீத கச்சேரி என தெரிந்து முதல் பாடல் முடிந்தவுடன் 6 பேர் கிளம்பிச்செல்ல (ஓட்டம் பிடிக்க ) நான் இன்னும் இரண்டு பாட்டு கேட்டு செல்லலாம் என ஸ்ரீதேவியிடம் கூற , இன்னும் 2 பாட்டு 5 ஆகி பின் 8 ஆகி பின் மங்களம் வரை இருந்து கச்சேரி கேட்டோம் , என் வாழ்வில் , எனது 33வது வயதில் நிகழ்ந்த ஒரு ஆகச்சிறந்த இசை மாற்றம் அது , இளையராஜா ஏஆர் கஜல் நுஸ்ரத் புறியந்தோப்பு பழனியின் கானா என பிச்சைப்பாத்திரத்தில் உள்ள பதார்தங்கள் போல் இருந்த எனது இசை கேட்பை 360 கோணம் திருப்பியது அந்த கச்சேரி , வந்தே மாதிரம் என்போம் , பாரில் உயர்ந்த நிலம் , உப்பும் கற்பூரம் விருத்தம் , இன்னமும் ஒரு தலம் பாடல் என என் செவியில் தேன் பாய்ந்த அந்த தருணத்தை இந்த கணம் வரை மறக்க இயலாது , அந்த தருணத்தை தந்தவர் தலைவர் , அஃதே போல் இன்னோர் தருணம் இனி என் வாழ்வில் இல்லை என்றே எண்ணியிருந்தேன் ஆனால் கடந்த செவ்வாய் அன்று மீண்டும் ஒரு புது உலகில் என்னை இட்டுச்சென்று கெலிடிக் பாப் ராப் ஜாஸ் ராக் என மேலும் இசையின் பல பரிணாமங்கள் காட்டி பிரிதோர் தருணத்தை அடைந்தேன் , அதை வேறு யார் தர இயலும் , மீண்டும் தலைவர் , ஆனால் இது கர்நாடக இசைக்களம் அல்ல , சுற்றிலும் இளைஞர்கள் சூழ மேற்கத்திய இசையுடனான ஓரு ஜூகல்பந்தி முயற்சியின் பயனாய் கிடைத்த அன்பெனும் பெருவளி இசை திரட்டு , தலைவர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு , மேலும் தகவல் தருவதாக சொன்னார் , பின் தகவல் ஏதும் இல்லை , நானும் மறந்த நிலையில் செவ்வாய் காலை அலுவலகம் வந்த பின் நினைவு வர , மாலை 4 மணிக்கு துவக்கினேன் பெரியபாளையத்திலிருந்து தரமணிக்கான 53 கிலோமீட்டர் பயணத்தை , வாகன நெரிசலில் மீண்டு அரங்கடைவதற்குள் திரையில் ஒருமையுடன் பாடல் முடியும் நிலையில் ஒரு மஞ்சளாடை மாது கையில் சிறிய மண்பாண்டத்துடன் அடிய படி சென்றார், ஒருமையுடன் பாடல் என்றாலே கந்த கோட்டத்தை அடையும் மனம் , கோவிலில் இருப்பது போல் நம்மை உணர்ந்திடச்செய்வார் தலைவர் , ஆனால் இங்கோ வேண்டும் ! வேண்டும் ! என்ற பாடல் முடிவடைய ஒரு வித உணர்வு நம்முள் புகுந்தது , அடுத்து காய்ந்த சதுப்பு நிலத்தில் வெள்ளாடையின் ஐவர் கருப்பாடையில் ஒருவர் என இது நல்ல தருணத்திற்கு மேற்கத்திய நடனம் ஆட , அந்த ஒரு புது உணர்வை என்ன சொல்லி விவரிப்பது , மெல்ல மெல்ல இந்த இசைத்திரட்டின் நோக்கம் புரியத்துவங்கியது எனக்கு , அடுத்து கூத்துப்பட்டறை பின்புலத்தில் நாட்டார் தெய்வ வழிபாட்டோடு அஞ்சாதே நெஞ்சே பாடல் , பரதநாட்டிய அபிநயத்தோடு கல்லார்க்கும் பாடல் , அதி வீரபாண்டியனின் நவீன ஓவியப்பின்புலத்தில் என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே பாடல் , முழுக்க முழுக்க கருத்தோவிய வடிவில் வெண்ணிலா பாடல் என வரிசையாக திரையிடப்பட , ஒன்றன் பிரம்மிப்பிலிருந்து மீளுவதற்குள் அடுத்த பிரம்மிப்பில் இன்பத் தாக்குண்டோம் . பாடல் வெளியீட்டை தொடர்ந்து இந்த முயற்சியின் நாயகர்கள் பாடல் தெரிவு செய்த பத்திரிக்கையார் பன்னீர்செல்வம் , இயக்குநர் ரபீக் இஸ்மாயில் , இசையமைப்பாளர் தலைவரின் மேனாள் சீடர் ஷான் ரோல்டன் , இசைத்திரட்டின் நாயகர் தலைவர் , இந்த இசைத்திரட்டு இத்தனை அருமையாய் வர காரணமான தயாரிப்பாளர் மற்றும் ஒன்மை மையத்தின் தலைவர் விக்னேஷ் சுந்தரேசன் உள்ளிட்டோருடன் கிருஷ்ணப்பிரியா ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினார் , நமக்கு மெல்ல மெல்ல என்ன நடக்கிறது என புலப்பட்டது , இந்த இசைத்திரட்டின் பின்புலத்தில் பலரின் பெரும் உழைப்பு இருந்துள்ளது , ஏறத்தாழ் 11 மாதம் நேரத்தை பணத்தை செலவிட்டு இதை ஆக்கியுள்ளார்கள் , தலைவர் சமீபத்திய நேர்காணலில் கூறியதை மீண்டும் ஒரு முறை கூறினார் அஃதாவது , இனி கர்நாடக சங்கீதத்தில் செய்ய ஏதுமில்லை என்ற நிலை அடைந்த இறுமாப்பு ஏதுமின்றி நான் கர்நாடக சங்கீத பாடகன் மாத்திரமல்ல , வேறு இசை முறைகளில் பாடத்தயார் என ஷான் ரோல்டனிடம் கூறினேன் அதன் பயனாய் அமைந்தது கோக் ஸ்டுடியோ பாடல் அதைத் தொடர்ந்து இதில் பங்கேற்றேன் , ஆனால் இவ்வளவு தூரம் என்னை நான் திரும்பிப்பார்க்க செய்யும் அளவில் இந்த அனுபவம் என கனவில் கூட எண்ணியதில்லை என்றார் , ஆம் தலைவரை கர்நாடக கச்சேரியில் இத்தனை ஆண்டுகளாய் கண்ட பலருக்கு இது ஒரு மாபெரும் விஸ்வரூபம் , ஏன் இந்த 13 ஆண்டுகளில் அவர் ஷூ அணிந்த நான் பார்பது இதுவே முதல் முறை , தொடர்ந்து பன்னீர் செல்வம் , ரோல்டன் , ரபீக் விக்னேஷ் ஆகியோர்களின் அனுபவங்களை கேட்க கேட்க ,தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு நீவீன கருத்துத்திரள்களை அநாயாசமாக எழுதிய வள்ளலாரை இந்த நவீன தலைவமுறை என்று கூறிக்கொள்வோர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தித்து செயலாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் . அடுத்த நிகழ்வாய் வள்ளலார் குறித்த ஆவனப்படும் அதிலேயே இந்த ஆறு பாடல்கள் உருவான விதம் என் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் ரபீக் , ஆறு பாடல்களும் , ஆவனப்படமும் கீழ்கண்ட லிங்கில் உள்ளது எனவே அதை விவரிக்க அவசியம் இல்லை என கருதுகிறேன் , இந்த இசைத்திரட்டின் மிக முக்கிய கூறு தலைவர் என்றாலும் அதை ஒருங்கிணைத்த ஷான் ரோல்டன் ,கிடாரிஸ்ட் விக்ரம் பாஸ் வாசித்த ஷாலினி டிரம்ஸ் கலைஞர் ராம்குமார் ஆகியோர்களை எத்தனை சொன்னாலும் போறாது , இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்ட லண்டனில் கெலிடிக் என்செம்பிள் எனும் இசைக்கலவையும் அத்தனை பாடல்களிலும் செய்துள்ளார்கள் . இந்த முயற்சிக்கு விமர்சனம் வருமா என்றால் வரும் , அது எப்படி ஒருமையுடன் பாடல் இப்படியெல்லாம் படமாக்குவீர்கள் என வினவுவார்கள் , அதற்கு பதிலாக இந்த ஆவனப்படத்தில் பேராசிரியர் கரு.ஆறுமுக தமிழன் கூறுவார் இவர்கள் சாறை துப்பிவிட்டு சக்கை மென்று கொண்டிருக்கிறார்கள் . ஆகவே அந்த கூச்சலை பொருட்படுத்த வேண்டாம் , இது ஒரு முயற்சி , அந்த முயற்சிக்கு நாம் அளிக்கும் ஆதரவே மேலும் பல முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் , தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒருதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே என்ற பாடல் வரியின்படி அந்த தந்திரம் சஞ்சய் சுப்ரமணியன் என்னும் மகா கலைஞன் அவரை பயன்படுத்த வேண்டிய முறையில் மென்மேலும் பயன்படுத்தினால் , இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வள்ளலார் போன்றோர் மக்களிடையே வாழ்வார் , அருட்பெருஞ்சோதியாய் !



 
 
 

Comments


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page