மல்லாட்டை மண்ணின் மாணிக்கம் !
- ARAVINDAN MUDALIAR
- Jul 27, 2023
- 1 min read

நல்ல இலக்கியவாதியாக நல்ல வாசகனாய் இருக்க வேண்டும் ,
அதற்கான வாழும் சான்று பவா !
மின்சார வாரியத்திலிருந்து வந்த உயரிலக்கிய அழுத்தம் பவா !
வாழ்நாளில் இவர் சந்தித்த பேராசான்கள் எண்ணில் அடங்கா ,
எந்த நாளும் அதற்கான இறுமாப்பு இம்மியும் இல்லா மனிதர் !
தொழில் நுட்பம் வாசிப்பை தின்றது ,
பவா தொழில்நுட்பத்தின் வாயிலாய் வாசிப்பை உயிர்பித்துள்ளார் !
மனிதத்தை முன்னிலைப்படுத்தும் பதிப்பாளர் ,
சாலச்சிறந்த எழுத்தாளர் , ஆகச்சிறந்த நடிகர் ,
ஷைலஜாவிற்கு உலகத்துகாவியங்களெல்லாம் கண்டிராத கதாநாயகன் !
வம்சிக்கு தந்தை மட்டுமல்ல குரு , ஆசிரியர் , வழிகாட்டி !
நல்ல நட்புக்கான இலக்கணம் , வாஞ்சையாய் பழகும் மனிதர்,
என எத்தனை உருவங்கள் அவதாரங்கள் இருந்தாலும் ,
பவா ஒரு தாய் , ஆம் கதை சொல்லும் தாய் ,
இந்த தாயின் கதை கேட்டு உறங்குவோர் எத்தனை எத்தனை ,
இவரின் கதை கேட்டவாறு நடைபயிற்சி செய்வோர் எத்தனை எத்தனை ,
இரயிலில் பேருந்தில் பவாவின் கதையாடல் இல்லாமல் இல்லை பயணம்.
பவா செல்லதுரை ஒவ்வொரு தமிழன் செவிகளில் வாழ்கிறார் ,
செவி வழியாய் இதயத்தில் அமர்ந்து கொள்கிறோர் ,
சோகத்தில் , பயத்தில் , மகிழ்வில் யாரையாவது கட்டியணக்க தோன்றும் ,
நான் பவாவை செவியில் அணைத்துக்கொள்கிறேன் !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
Comentários