top of page
Search

நெய்வேலி தங்கம் ! நாகல்கேணி நல்லார் ! முழவில் மூதறிஞர் நெய்வேலி வெங்கடேஷ் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Dec 22, 2022
  • 1 min read

ree

தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே ,

முழவு முழுமை அடைந்தது நின்வாசிப்பால்,

வாசிப்பில் வற்றாத ஜீவநதி தலையாட்டியார் ,

தலையாட்டியார் தனி வாசித்தால் அனல் பறக்கும்,

பறக்கும் விரல்கள் சிறக்கும் என்றும் சீரிய லயத்தில் ,

லயத்தில் சொற்கட்டுக்கள் பேசும் ,

பேசும் ஓராயிரமாண்டுகள் நின் கும்கிகள்,

கும்கிகளை விஞ்சும் ஃபரன்கள் ,

ஃபரன்களை மிஞ்சும் தாளகதிகள் ,

தாளகதிகளை முந்தும் தொப்பிகள்,

தொப்பிகளை பினதள்ளும் லயக்கட்டுகள்,

ஆம் உங்கள் வாசிப்பில் ஒரு இசைகூறு பிரிதொன்றை முந்தும்

உங்களை வாசிப்பில் முந்த எவருண்டு !

நெய்வேலி வெங்கடேஷ் ஆகச்சிறந்த வித்வான் ஐயமில்லை !

அதிலும் சிறந்த மனிதநேய மாண்பாளர் என்பதில் ஐயமுண்டோ !

கண்கள் சிரிக்கும் வெகு சிலரில் தலைசிறந்தவரிவர் !

வாஞ்சை நாயகன் , எங்கள் பாசமிகு அண்ணன் !

சஞ்சய் அறிந்த புண்ணியத்தில் யாமறிந்த புண்ணியரே !

அன்பு பாராட்டுவதில் உமக்கு இணை எவரே !

தம்பி உடையான் படைக்கஞ்சான் ,

சஞ்சய் வரதர் என இரு தம்பிகள் வாய்த்த தகைமையாளரே !

எங்களை போன்ற எளியாரையும் ஏற்று பழகும் பண்புப்பெட்டகமே !

இன்று இனிது பிறந்தநாள் காணும் எங்கள் மிருதங்க மகாசர்வர்த்தியே !

நெய்வேலி தந்த நல்ல தங்கமே !

நாகல்கேணி நல்லாரே , பெரும் உவப்புமிகு பேராசனே !

வாழி ! வாழி ! நீ பல்லாண்டு ! பல்லாண்டு !

நெய்வேலி வெங்கடேஷ் பாணி பாரெங்கும் பறைசாற்ற ,

ஒராயிரம் சீடர்களை உலகிற்கு அர்பணிக்க அன்பு வாழ்த்துக்கள் !

முழவின் துணையால் தாளங்காட்டி முழவும் யாழும் ஒன்றாய் கூட்டி ,

குரலையதனுள் நன்றாய் ஏற்றி , மூவர் கூட்டணி உலகை ஆளவேண்டுமே !

இசை ஆளவேண்டுமே ! வெங்கடேஷ் நீடுடி வாழ வேண்டுமே !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 
 
 

1 Comment


mythram29
Dec 22, 2022

Aravindan

Wow. I bow down to your writing. Keep it

Like
Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page