நாதசுதா நல்ல தருணத்தில் நாதநிலை, மயிலிறகுமத்யமாவதி,சஞ்சய் செயலால் பகுதாரியில் வேளச்சேரியில் வேலன் !
- ARAVINDAN MUDALIAR
- Apr 8, 2022
- 5 min read

அரசல் புரசலாக சித்திரை 1இல் தலைவர் கச்சேரி என்று எதிர்பார்த்திருந்த நமக்கு இனிய அதிர்ச்சியாய் , நாலசுதாவில் கச்சேரி என்று அழைப்பு வர , ஆனந்தக்கூத்தாடினான் பாடிக்கொண்டு வேளச்சேரி சென்றோம் , 2020இல் இங்கு கச்சேரி கேட்டோம் , , இரண்டாண்டில் என்னமாய் மாறிவிட்டது சாலைகளும் பாலங்களும் , கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமம் மட்டும் அப்படியேதான் இருந்தது , கடந்த தடவையைவிட நாற்காலிகளை முன்னே போட்டு புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் ஏற்பாட்டாளர்கள் . வழமை போல் சைவ வைணவ பூதகணங்கள் வந்தமரந்தன , மேடையில் தலைவர் , நெய்வேலியார் , அரது , ராகுல் . கச்சேரி 6.30 மணிக்கு துவங்கிற்று .இந்த பாடல் பட்டியல் வெளியிட்டால் ஒரு வித பரபரப்பு இல்லாமல் கச்சேரி கேட்பது போல் உள்ளது என மாமா மாமிகள் முணுமுணத்தனர். அதெல்லாம் சும்மா எங்களுக்கு எப்படி சண்டை போட வேண்டும் எப்படி சண்டைபோட வேண்டும் என்பதற்கான முன் தயாரிப்பிற்கு , நன்கு உதவுகிறது இந்த பாடல் பட்டியல் என்றான் திருமலையப்பன் வாயெல்லாம் பல்லாக.
1) அழகான ஸ்ரீரஞ்சனி மினி ஆலாபனை தந்து துவக்கினார் தலைவர் கச்சேரியை , ப்ரோச்சேவாரெவரே தியாகராஜர் பாடல் , ராமரை அன்றி வேறெவர் எமை காக்க என்கிறார் , தலைவரை தவிர வேறு இவர் செவ்விசை தர என அவை கேட்டது , வழக்கம் போல் ஸ்வரங்கள் வரங்களாக வந்து விழுந்தன , தலைவரோடு வரதவும் நெய்வேலியாரும் வழமையான் சங்கீத ப்ரளயத்தை உருவாக்கினர் , தலைவர் மா வில் விளையாடினார் .
2) மீண்டும் ஒரு மனி ஆலாபனை சங்கராபரணத்தில் , இராமலிங்க அடிகளாரின் இது நல்ல தருணம் பாடினார் தலைவர் , அருள் செய்யவில் என்னே ஒரு ஓய்யாரம் , அருள் பெற்றோம் தலைவர் இசை வழி , வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது என்று அருமையா இயற்றியுள்ளார் வள்ளலார் , அதை வகையாக சங்கராபரணத்தில் புகுத்தினார் தலைவர். அழகாய் ஸ்வரத்தை துவக்கினார் தலைவர் , மேற்கத்திய நோட்டுக்கள் எதிர்பார்த்தோருக்கு பல்பளித்து பாரம்பரிய சங்கராபரணத்தில் ஸ்வரத்தை பாடி முடித்தார் . வரது வயலின் கொஞ்சியது சங்கராபரணத்தை, தலையாட்டியார் அருமையான லயவித்தையைக்காட்டினார்.இந்த முடிப்பில் தலைவர் அழகாய் சங்கராபரணத்திற்கு மெருகு சேர்த்தார்.
3) ஆலாபனை தர்பார் , நீண்ட நாளுக்குப்பின் சஞ்சய் அரசவையில் ஒய்யாரம் காட்டியது தர்பார் , தர்பாரை தலைவர் அணு அணுவாய் ரசித்து ஆலாபனை புரிந்தார் , தொடர்ந்து வரது தர்பாரை வழிநடத்தி அரங்கிற்கு மறு ஒளிபரப்பு செய்தார் , என்னே வளம் வாசிப்பில் வரதுவிற்கு நிகர் வரதுவே ! ஸ்மரமானஸ பத்மநாப சரணம் என்று ஸ்வாதி மாமன்னரின் பாடலை பாடினார் தலைவர் , ஆழ்வார்கடியான் , இது நல்ல தருணம் இரண்டு பாடல்களும் எங்கள் திருமாலை புகழ்பாடல் என்றான் , கோபாலகிருஷ்ணமூர்த்தி அமைதியே உருவாய் பாடலை கேட்டார் , 5 நிமிடங்கள் பாடினாலும் பத்மநாபரை கண் முன் கொண்டு வந்தார் தலைவர்.
4) ஆலாபனை காயகப்பிரியா ஆதாவது பாடுவோருக்கு பிடித்த ராகம் என்றான் திருமலை , சஞ்சய் பாடினால் கேட்போருக்கும் பிடிக்கும் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , நாங்கள் அமைதியாக இருந்தால் அந்த வையகத்திற்கு பிடிக்கும் என்றேன் நான் , என்னை பிடி பிடி எனப்பிடித்தார்கள் இருவரும் , இதற்குள் தலைவர் காயகப்பிரியாவை ஒரு பிடி பிடித்தார் , மேளகர்த்தா ராக சக்கரவர்த்தி அந்நாளில் கோடீஸ்வர அய்யர் , பின்னாளில் எஸ்.கே.ஆர் இன்று தலைவர் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , அதை மெய்ப்பிக்குப் வகையில் உருக்கமாக அமைந்தது ஆலாபனை , வரதர் மேலும் அதை உருக்கி அரங்களை உலுக்கினார், கோடீஸ்வர அய்யரின் நாத நிலை கண்டு நான் பாடினார் தலைவர் , அந்த நான் அருகனாவில் அடேயப்பா அசத்தினார் தலைவர் , ஓது சிரியை கிரியை யோக ஞான பரணா நான் மோஹன மனோஹர குஹானா என்று தலைவர் பாட பாட அரங்கு கட்டுண்டது இவர் பேரிசைக்கு , அதிலும் அந்த அருகனா வில் அருமையோ அருமை , அப்படியே ஸ்வரம் போனார் தலைவர் , பின் சரணம் ஏழிசை லயசுதியில் தலைவர் அரங்கையே தன் அருமையான இசையால் மயக்கினார். அன்போடின்புர மதுரகவி மதகஜ தாசன் என்று தன்னை தான எப்படியெல்லாம் வர்ணித்துள்ளார் கோடீஸ்வர அய்யர் என்று மலைத்தார் கோபாலகிருஷ்ணர். நாம் தலைவரின் இசையில் மலைத்தோம்.
5) மூன்றாவது ஆலாபனை மத்யமாவதி , கட்ந்த கச்சேரியில் இலேசாக மத்யமாவதியில் விருத்தம் பாடியதற்கு உருகினோம் , இன்று முழு நீள மத்யமாவதி என்கிற நினைப்பே பூரிப்பை தந்தது, தலைவர் மத்யமாவதி என்னும் தேரை அழகாய் அரங்கை வலம் வரச்செய்தார் , பிரம்மாண்ட தோற்றம் கொண்ட தேர் தலைவரின் ஆலாபனைக்கு ஏற்றவாறு நகர்ந்தது , தேரடி முதல் தேர்முடி வரை தலைவர் அங்குலம் அங்குலமாய் ஆலாபனை புரிந்தார் , தேர் ஆண்டு முழுதும் வீதுலா வருவது இல்லை , ஆண்டிற்கொரு முறை திருவிழாவில் பிரம்மாண்டமாய் வருவது போல் தலைவர் மத்யமாவதியை பிரம்மாண்டமாய் படைத்தார் , அரங்கின் குளுகுளு வசதியை விஞ்சியது தலைவரின் ஆலாபனை. தொடர்ந்து வரதர் மத்யமாவதியை மனதிற் ஏற்றி விரலில் பாய்ச்சி நம் காதில் தேனூற்றினார், ராஜாதி ராஜா ராஜன் மகுடீ ததாமணி என்று மூன்றாவது சரணத்தில் விருத்தம் பாடி தலைவர் பாலிஞ்சு காமாஷி என்று பாட அரங்கில் கைத்தட்டல் பறந்தது , தீட்சிதர் கிருதி காஞ்சி தெய்வத்தை போற்றும் பண் , அனுபல்லவி சாலா பஹூ விதமுகாவில் தலைவர் அரங்கையே புரட்டி எடுத்தார் , காந்தமகு பேரு பொந்தினவில் நிரவல் அமைத்து அரங்கை மத்யமாவதியில் முழுதும் புகுத்தினார் தலைவர் , தீட்சிதர் பாடலுக்கு மிருதங்கம் வாசிப்பது என்பது வித்தை தெரிந்தவர்களுக்கே சுளுவான காரியம் என்பதை நெய்வேலியார் அருமையாக காட்டினார் தன் வாத்தியவித்தையில் , வரதுவும் நெய்வேலியாரும் பன்முறை இந்த பாடலுக்கு தலைவருக்கு வாசித்திருந்தாலும் , புதிதாய் வாசிப்பது போல் அத்தனை மெனக்கெட்டு வாசித்தனர்.
6) மீண்டும் ஒரு ஆலாபனையா என்று தலைவர் ஹமீர் கல்யாணியில் அககமகிழ்ந்தோம் , ஆசை தோசை என்று மினி ஆலாபனையோடு நிறுத்தி அவன் செயலின்றி ஓர் அணுவும் அசையா`பாடினார் தலைவர்.ஹரிகேசநல்லூர் முத்தைய்யா பாகவதரின் அருமையான பாடல் இது , ஒரு காலத்தில் கச்சேரி தோறும் பாடுவார் தலைவர் , உவமறியா எங்கள் வேணுகோபாலன் வரியில் அப்படியே ஹமீரை பிழிந்து பாடினார் தலைவர்.மதமும் கர்வமும் கொண்டார் வாழ்வென்ன வாழ்வோ , வஞ்சகம் அசூயையால் வந்திடும் தாழ்வே , என்னே வரிகள் என்றான் திருமலை , கோபாலர் ஆமாம் திருமலை உனக்காகவே எழுதியது என்றார். நிதம் ஹரிகேசன் பதம் வரியில் தலைவர் மேலே சென்று அரங்கை மிரளவைத்தார்.
7) ராகம் தானம் பல்லவி பகுதாரி துவக்கினார் நம் கர்நாடக சங்கீத பாகுபலி , ஜி.என்.பியின் செல்லப்பிள்ளை இந்த பகுதாரி , பாரத் கலாச்சாரில் தலைவர் உன்னடி கதியென்றைடைந்தேன் தாயே உண்மை நீ அறியாயோ உலக நாயகியே பாடியது இன்னும் நம் செவியில் ஒலிக்கிறது , தலைவர் பகுதாரியை பகுதிபகுதியாய் ஆலாபனை செய்து அமர்களப்படுத்தினார் , தலைவர் பிடித்த ராகம் என்பதை அவரின் உடல் மொழியில் தெரிந்து கொள்ளலாம் , ஒரு வித துள்ளல் தொற்றிக்கொண்டது போல் இருந்தது , பிருஹாக்களிலேயே கண்டு கொள்ளலாம் இதை , மிகுந்த உன்னதமான ஆலபனை தந்தார் தலைவர். தொடர்ந்து வரது வயலினில் பகுதாரி புறா பறந்தது , மிகுந்த உற்சாகம் பீறிடும் ஆலாபனை தந்தார் வரதர். தானம்த ஆனம்த என்று தலைவர் தானத்தை துவக்க அரங்கில் அனைவரும் தாளம் போட்டனர் , வழமை போல் பல சுற்றுகளாக தலைவர் தானம் அரங்கை சுற்றி எடுத்தது , தானம் முடிந்தபோது ரங்கராட்டிணத்திலிருந்து இறங்கிய உணர்வை பெற்றது அவை.வேலன் வருவானோடி சகியே வடிவேலன் வருவானோடி சகியே என்ற பல்லவி பாடினார் , கடந்த கச்சேரி போல் இந்த பல்லவி வரிகளும் தலைவரின் சொந்த வரிகளாக இருக்க வேண்டும். வேலன் வருவானோடி , வடிவேலன் வருவானோடி , சிவவடிவேலன் வருவானோடி , சிங்கார சிவவடிவேலன் வருவானோடி என்று தலைவர் பாடி பாடி வேலனை வரவைத்தார் அவைக்கு , ஆம் வேளச்சேரிக்கு வேலன் வந்தான் தலைவர் பாடலில் அகமகிழ்ந்தான் , வழமை போல் நெய்வேலியாருடன் கணக்குகளை பாடிவிட்டு ஸ்வரம் சென்று அனைவருக்கு பதநி தந்தார் தலைவர் , அனைவரும் ராகமாலிகை நான்கா ஜந்தா என்று எதிர்பார்க்க , பகுதாரி மட்டுமே என்று பல்பளித்து ஸ்வரத்தில் விளையாடி நெய்வேலியார் தனி விளையாட்டை துவக்கி வைத்தார் தலைவர். நெய்வேலி வெங்கடேஷ் என்னும் தலையாட்டி சித்தர் , தன் தனிபாங்கான தனியை மேலும் ஒரு முறை அரங்கம் அதிர அளித்தார் , மனிதர் என்னமாய் மெனக்கெட்டு வாசிக்கிறார் , எத்தனை வித்வத் இருந்தாலும் அந்த தனியை அத்தனை பயபக்தியாய் வாசிப்பது , நொடிக்கொரு முறை தலைவரை பார்த்து அவர் ஓப்புதலை பெறுவது , வரதாழ்வாரின் சபாஷ் களை கேட்டு கேட்டு வாசிப்பது என்ன அந்த பத்து நிமிடங்களில் எத்தனை வித உணர்வுகளை பெறுகிறார் தருகிறார் நெய்வேலியார் , பிரமாதம்.
8) தொடர்த்து லாலிஸிதளு மகனா பாடினார் ராகமாலிகையில் முதலாவதாக நம் தேஷ் , அடடா என்னே இனிமை , அரளில மாகாயி பேராளியில் மேலும் நம்மை உருக்கினார் தலைவர் , பின்புலத்தில் அருமையான நாதம் வழங்கினார் தலையாட்டியார் , வரதர் குழைத்து வாசித்தார் தேஷை , பாலகனகே கானேயில் காப்பியில் தர அரங்கு அருமையாக பருகியது , முகுளு நகையிந்த சரணத்தை ஜோன்புரியில் தலைவர் ஜோராய் பாடி புரந்தரை போற்றினார். ஒரே வரியில் ஜோன்புரி காப்பி தேஷை தலைவர் கொண்டு வந்த பாங்கை என்ன சொல்லி விவரிப்பது அருமை.
9) பாடல் பட்டியல் போட்டாச்சு ராகமாலிகையும் இல்லை வேறு என்ன அடுத்த விநாடி ஆச்சர்யம் என்று நாம் எண்ண , தலைவர் உப்பும் கற்பூரமும் விருத்தத்தை சாமாவில் பாடினார் , நான் தலைவர் 11 ஆம் ஆண்டாய் கேட்கிறேன் இதுவே சாமாவில் கேட்பது முதல் முறை , அப்படியே தில்லைஸ்தலம் என்று சொல்ல தொடங்கினார் பாடினார் , கோபாலகிருஷ்ணபாரதி பாடல் , வழமை போல் கண்ணீர் கசிய கசிய கேட்டார் பாடலை , சொல்லத்தகும் இதுவே சிவலோகம் பாட , ஆம் சஞ்சய் பாடினால் அதுவே சிவலோகம் என்ற நா தழுதழுக்க , தலைவரின் இந்த பாடலை கேட்டால் நம் பிறவிப்பிணி யாவும் தீரும்.
10) சிவ விருத்தம் தொடர்ந்து இந்தா திருமால் விருத்தம் என்று குலம் தரும் செல்வம் தந்திடும் , கோமளாங்கியில் பாடினார் தலைவர் , திருமங்கை ஆழ்வாரின் தலைவர் பாட பாட ஆழ்வார்கடியான் உருகினான் , தலைவர் எதிர்பார்த்தபடி நாராயணனை துதிப்பாய் நெஞ்சமே பாடினார் , ராகவ ராமானுஜ தாசர் பாடல் இது , தீர வினை தீர்க்கும் வரிகளில் எப்போதும் புலப்படும் தலைவர் கம்பீரம் ,எத்தேசமும் புகழும் யசோதா மைந்தனை எம்பெருமான் என்னும் எனதய மாயனை என்ற வரிகளுக்கு அவையில் ஆடாத தலையே இல்லை , தலைவர் இசைக்கு இணையே இல்லை.
9.00 மணிக்கு கச்சேரியை பவமான சுதுடு பாடி முடித்தார் தலைவர் , 2.30 மணிநேர கச்சேரி பத்துப்பாட்டு அதில் பக்தியும் உண்டு சிந்தைக்கும் மிக உண்டு , அருமையான கச்சேரி கேட்ட மகிழ்வுடன் , சித்திரை 1ற்கு நித்திரை மறந்து காத்திருப்போம்.
Comentarios