சஞ்சய் சபாவில் ஸாமா, கீரவாணி , ஹம்ஸத்வனி வைபவம் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 27, 2022
- 5 min read

சீசனில் தலைவர் எல்லா இடத்திலும் பாடினாலும் , கோரோனா காலகட்டத்தில் நாம் சீசன் என்னும் ஒன்றை இழந்து நின்ற தருணத்தில் , கைகொடுத்தது முத்தமிழ் பேரவை சஞ்சய் சபா ! வழமையான சீசன் கலாட்டாக்கள் இல்லாத அமைதியான சூழல் , நெரிசல் இல்லாத அடையாற்று கரையில் அமைந்துள்ளது , தேவையான மகிழுந்து நிறுத்தம் என சகல வசதிகள் இருக்கும் கலைஞர் மன்றத்தில் நம் கலைக்கோவின் கச்சேரி கிறிஸ்மஸ் அன்று. டிசம்பர் 25 அன்று கிருஷ்ணகான சபை 2019 வரை தலைவரின் நிரந்தர பாடுகளம் ! காலத்தின் ஓட்டம் அனைத்திலும் மாற்றம் , ஆனால் நமக்கு ஏமாற்றம் இன்றி சஞ்சய் சபா இங்கே வா என்றழைக்க ஓடினோம் . மேடையில் மேதைகள் மூவருடன் சீடர்கள் ரேதஸ் , ராகுல் . 6.30 மணிக்கு ஏற்றமிகு கச்சேரி இனிதே துவங்கிற்று . கோபால கிருஷ்ண பாரதி , திருமலை இருவரும் வாசலில் இருந்த காப்பியை கபளீகரம் செய்துவிட்டு வந்தமர்ந்தனர். இதுவரை நாம் எத்தனையோ கச்சேரி இங்கு வந்துள்ளேன் இதுபோல் அவை நிறைந்த கச்சேரி இல்லை , ஒரு இருக்கை கூட காலியாக இல்லையே என்று ஆச்சர்யப்பட்டார் கோபாலகிருஷ்ணபாரதி. எல்லாம் பெருமாள் செயல் என்று பெரிதாய் இளித்தான் திருமலை.
1) டி.எம்.தியாகராஜனின் விநாயகா சரணம் , கல்யாண வசந்தம் பாடல் முதல் பண்ணாய் பண்பாடியது அவையில். வழமையான ஸ்வர வேடிக்கைகளை தன் வாடிக்கையாக்கி கொண்ட மூவரணி மும்முரமாய் நம்மை முக்தாய் ஸ்வரத்தில் பிழிந்து , இன்னிசையால் இன்னும் கொஞ்சம் உலுக்கி , சிட்டை ஸ்வரம் துவக்கினர். கல்யாண வசந்த சிட்டைஸ்வர பட்டாம்பூச்சி அரங்கெங்கும் பறந்து பரவசப்படுத்தியது. அந்த தானி சநிதபமகரிச தானி என்றுமே ஒரு கேடபதற்கரிய வரம்.
2) அடுத்து சூழ்நிலைக்கு பாடும் சூரர் கலைஞர் மன்றத்தில் சூரியனை துதிக்கும் சூர்யமூர்தே நமோஸ்துதே பாடினார் சௌராட்டிரத்தில். தீட்சிதர் கிருதி , சௌராட்டிரம் அழகாய் சூரிய ஒளி தந்தது சஞ்சணய் ஒலி மூலம். நெய்வேலியார் வழமை போல் தலையாட்டி ரசித்ததவாறு லயமளிக்க வரதர் , வரமாய் வாசிக்க அழகாய் அரங்கேறியது நவகிகரப்பண். காஷ்யபரின் சேய் சூரியதேவர் இன்றி நாம் வாழ்வது எத்தனை அசாத்தியம் , அதுபோல் தலைவரில்லா இசை ! நெய்வேலியாரின் அருமையான நிதான நாதம் பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.
3) சஞ்சய் சாமா சபையை நிறைத்தது அடுத்து , மினி ஆலாபனையே என நாம் திட்டமிட , முழு ஆலாபனை என்று விரிவுப்படுத்தினார் ஆலாபனையை . என்னே ஒரு சௌக்கியம் , என்னே ஒரு இனிமை , என்னே ஒரு கனிவு . சஞ்சய் சாமா இமியமலையின் உச்சியில் அவையை உட்கார வைத்து. இமயமலையில் அமர்ந்திருந்தோருக்கு பனிக்கூழ் வழங்கினார் வரதர் ஆலாபனையில். மரவாகவே ஓ மனஸா மாராமுனி நிமிஷமைனா பாடினார் தலைவர். பட்டிணம் சுப்ரமணியர் பண். ஜாம்பவான்கள் எம்.எஸ் , செம்மங்குடி போன்றோர் பாடிய பண். தரணி வம்ச திலகுடேவில் தலைவர் சங்கதி சாம்ராஜ்யம் நிறுவி , ஓ மனஸா என்று மனதை உருக்கினார். பரமகஹம்ஸா முனி மானாஸவில் நிரவல். திருமலை சீசனின் முதல்முறையாக மூக்கை சீந்தினான். பிஎப் 7ஆக இருந்த தொலையப்போகிறது அப்பால் போய் அழு என்று பரிதாபம் காட்டாமல் விரட்டியடித்தார் கோபாலகிருஷ்ண பாரதி. இதற்குள் தலைவர் நிரவலை பெரிய அளவில் செய்துகொண்டிருந்தார். நிரவல் ஸ்வரம் நிரவலை விஞ்சியது , அடுத்து வந்த கல்பனாஸ்வரம் சொல்லவே வேண்டாம். மூவர் கூட்டணி அரங்கை சாமாவில் சல்லடைபோட்டு விளையாடினர். தலைவர் ரிகரிக்களை தவழவிட்டார்.
4) பாரெங்கும் பார்த்தாலும் உம்மைப் போல பரிமளமுள்ள பரமபுருஷன் கிடைக்குமோ அடுத்து. கல்யாணியில் . இந்த மகாவித்வானை 10 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு வருகிறோம். ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் மாத்திரமே அறிவார். சீசனில் முதல் கல்யாணி , ஆனால் ஆலாபனை இன்றி , மெயினில் பாடுவாரா , ராகம் தானம் பல்லவியா என்று அனைவரும் பட்டிமன்றம் நடத்த இவரோ கணம் கிருஷ்ணைய்யரின் கும்பகோணத்து சாரங்க பாணியை பாடினார். அந்த சாரன்கபாநியே கச்சி கல்யாந ரன்கனை சௌக்யமாக கார்த்தாளும் வரியில் தான் கல்நாணி எப்படியெல்லாம் தலைவர் நாவில் தாண்டவமாடுகிறது. திருமலை சீந்தி மூக்கை மீண்டும் சீந்தி அழுது அழிச்சாட்டியம் செய்தான். கும்பகோந க்சேத்திரம் தனிலே வசிக்கும் கோமளவல்லிக்க்-உக்ஹன்தவரே எம்பெருமானும் கும்பனாதரும் னீரே ஏதும் பேதமில்லாமல் வாழ்ன்தவரே என்று தலைவர் பாட , கோபாலகிருஷ்ணபாரதி கேட்டாயா நிர்மூடா என்று திருமலை தலையிரல் கொட்டினார். அன்புடனே முத்துக்குமரன் மாமனே என்த னாளைக்கும் பூர்ந சன்திரன் போல இன்பமுடனே கச்சிக்கல்யாந ரன்கனை காக்கும் ஆந்டவனே வேந்டிய வரன்களை டாரும் என்று சரணத்தின் ஒவ்வொரு வரியிலும் சவை வைணவ ஒற்றுமையை பறைசாற்றினார் கிருஷ்ணைய்யர்.
5) கீர்த்திமிகு கீரவாணி ஆலாபனை அடுத்து , நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் கீரவாணி தந்தார் தலைவர். நல்ல மணத்துடன் வந்தது கீரவாணி , தலைவரின் இந்த ஆண்டு பாணியான நேசல் ஆலாபனை தொடர்ந்தது , அருமையான ஆலாபனையை திட்டமிட்ட அரங்கேற்றினார் தலைவர், மேலே சென்று பாடவதிலும் சரி ப்ருஹாக்களிலும் சரி அருமை , கடையில் ஒரு ஆங்கில நோட்டை கட்டவிழ்த்தார் பாருங்கள் படு அருமை. வரதர் கீரவாணி வானவில் காட்டியது , அத்தனை அழகு அத்தனை வண்ணமிகு ஆலாபனை , தலைவர் வழியில் தரணியாள்வதில் வரதாழ்வார் வரம் வாங்கி வந்தவரல்லவா! கோபபால கோபாலகிருஷ்ண பாரதியை தலைவர் இன்னமும் சந்தேகம் படலாமா என்று பாடி குளிர்வித்தார். தலைவர் பொன்னம்பலந்தனில் வரியில் நர்த்தனம் ஆடினார் நாவில் . பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான் என்று அனுபல்லவியை அணுஅணுவாய் ரசித்தளித்தார் ராகங்களின் ராஜா . அன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல் புலையர்வரைக்கும் பின்னமறவேதோணுதே இந்தப் பேதமது காணேன் தன்னையறி கிறதவமே பெரிதென்று தரணியில் கோபாலகிருஷ்ணன் சொன்னதெல்லாம் மறந்துஇந்த மாயச்சுழலில் வீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ என்று தலைவர் பாட பாட கோபாலகிருஷ்ணபாரதி , கண்ணீர் மல்கி கேட்டு ரசித்தார் , திருமலையப்பன் தக்க தருணம் இதுவே என வந்து இது என்ன வேரியண்ட் என்று நக்கலடித்தான். இதற்குள் தலைவர் இன்னும் சந்தேகப்படலாமாவில் ஸ்வரம் துவக்கினார். நிரவல் ஸ்வரம் வழமை போல் வானைப்பிளந்தது , அதிலும் தலைவர் மிக உற்சகமாய் ஸ்வரம் பாட நெய்வேலியார் அசுர வாத்தியம் தந்தார் , வரதர் மிக அருமையாக வாசித்தளிக்க பிரமாதப்பட்டது கீரவாணி, இவர்களின் கண்குகள் பாடலுக்கு மேலும் பிரம்மாண்டமாக்கியது. பாடலின் கடையில் காற்றில் எந்தன் கீதம் வந்து அரங்கை சிலிர்பில் ஆழ்த்தியது ஸ்வரப்பிரஸ்தாரமும் பாடி பாடலை மிக அருமையான நிலையில் முடித்தார் தலைவர். இன்னமும் சந்தேகம் படலாமா சைவமே மேன்மையானது என்று நான் அறிவித்தேன் திருமலையை முறைத்தவாறு.
6) மீண்டும் ஓர் கலாவதி , என்னடு ஜூதுனோ தியாகையர் பாடல் , திருமலைக்கு பெருமை தாளவில்லை , தலைவர் பாடலை மிக அருமையாக எடுத்துச்சென்றார். 2014 வாக்கில் அதிகம் இந்த பாடலை பாடியுள்ளார். சங்கதிகள் நிறைந்த பண் இது. வரதர் பாடல் முழுதும் அருமையாக பின்தொடர்ந்து பரிமளித்தார். தலையாட்டியார் நாதம் படுபிரமாதம்.
7) ராகம் தானம் பல்லவி ஹம்ஸத்வனி , மிக அழகாய் ஆரம்பித்தார் தலைவர் , என்னே ஒரு அருமையாக ராகஸ்வரூபம் காட்டுகிறார். வர்ணமாய் வரும் ஹம்ஸத்வனி வரமாய் வந்தருளியது , மிக உன்னதமான ஆலாபனை அமைந்தது , அதில் தான் எத்தனை பக்தி , மிக மிக அருமையாக தலைவர் ராகத்தை எடுத்துச்சென்றார்.அந்த பருவம் முழுதும் தலைவர் பாணி அசாத்தியத்தை சாத்தியமாக்குவது என்பதே , அத்தனை அழகாய் ராகத்தை மேலே கொண்டு சென்று நின்றார் , மேலே ஆலாபனையில் மேன்மை கேட்போரை கிரங்கடித்தது. அடுத்து வரதர் ஹம்ஸ்த்வனி சுருக்கமாக அமைந்தாலும் சுகமாக வாசித்தருளப்பட்டது. தானம் எக்ஸ்பிரஸ் தரமாய் தந்தடர் சோதரர்பள் இருவரும் ஆம் இவர்கள் இருவரம் . தலைவர் நா மாத்திரம் அல்ல கரங்களும் தானம் பாடியது , தானத்தை எடுத்துச் செல்வதற்கான அருமையான ஒரு பாதையை வரதர் ஏற்படுத்தி தர தலைவர் அதி அற்புதமாய் செய்தார் தானத்தை. பல்லவியில் கணபதி ராயன் அவன் காலை பணிந்திடுவோம் குணம் உயர்ந்திடவே பாடினார். ஆம் ஹம்ஸத்வனி புண்ணியத்தில் மீண்டும் தும்பிக்கை நாயகன் அரங்க வலம் வந்தான். சுப்ரமணிய பாரதியார் பாடல் வரி இது , துள்ளிவருகுதுவேல் வெற்றிவடிவேலன் அவன்னுடை வீரத்தினை புகழ்வோம் சுற்றிநில்லதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் , அடுத்து பல்லவியாய் பாடினார். சுற்றிநில்லதேபோ பகையே என்று அருமையாக பல்லவியை பிரமாதப்படுத்தி அப்படியே ஸ்வரம் துவக்கினார். ஓம் சக்தி ஓம் சக்தி என்று தலைவர் பல்லவியை வித்தியாசமாய் வழங்கினார். ராகமாலிகையில் முதலாவதாக பாகேஸ்ரீ செல்லம் கொஞ்சியது என்னே அருமையாக தலைவர் ஸ்வரம் பாட அதை அருமையாக பதிலளித்தார் வரதர். அடுத்து ஆஹா தருணம் நளினகாந்தி , மனவியாலகிஞ்சரா நெடியுடன் வந்தது , எத்தனை அ.கான பாடல் தலைவர் ஏனோ இதை இப்போதெல்லாம் பாடுவதில்லை , அடுத்து மிக அற்புதமான சிவரஞ்சனி , கேட்பாரை கலங்கடிக்கும் பேரிசை , அவையில் இருந்தோர் அனேகர் கண்களில் கண்ணீர் வரவைத்தது சிவரஞ்சனி. அந்தகால தூர்தர்ஷன் ராகம் அரங்கில் வந்திறங்கியது , அடேயப்பா என்னே இவரின் இசைஞானம் என்று புல்லரித்துப்போனோம். தொடர்ந்து நெய்வேலியார் தனி வழக்கம் போல் 10 நிமிடங்கள் தீப்பொறி சாந்தம் சௌக்யம் நிர்மலம் அனைத்தையும் ஓருங்கே கொண்டு வழங்கப்பட்டது. மனிதர் முந்தைய தினம் தான் ஒரு படுபிரமாத தனி தந்தார் இருந்தபோதிலும் எங்கிருந்தது தான் இத்தனை திறனை இறக்குகிறாரோ என அயர்ந்துவிட்டோம்.
8) ஒருவாறு சமநிலையில் இருந்த சைவவைண கச்சேரியில் மீண்டும் வைணவம் தலைதூக்கி தலைவர் பாடியது மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே குலசேகர ஆழ்வார் பண் , துர்கா , மாயமாளவ கௌளை , சாரங்கா , இந்தோளம் , நீலாம்பரி என ராகங்கள் ஒவ்வொன்றும் நம்மை சொக்கவைத்தது. குங்குமல்லி கருங்குழலால் வரியில் விக்கித்தான் திருமலை. இந்தோளம் மலையதனால் பிரம்மாண்டம் காட்டியது அந்த தேவரையும் அசுரரையும் நம்மை என்றும் மயக்கிடும்.
9) அடுத்து புரந்தரதாசரின் பாகேஸ்ரீ நந்தனயா பாடினார் தலைவர். நாம் எப்போதும் இந்த பாடலில் மகிழ்வது அனுபல்லவி பந்தகலன்னு பவரோககலூலன்னு நிந்திபதி மிட்டாய் , ஆம் தலைவர் பாகேஸ்ரீ மிட்டாய் தருகிறார் நமக்கு. சரணம் ஜபதப பாடி நம்மை மகிழ்வித்தது , அதிலும் ஜூபுன மதிகலிக சாத்தியவல்லித படுபிரமாதம்.
10) கந்தர் அலங்காரம் விழிக்குத்துணை பெஹாக்கில் அழகாய் விருத்தம் செய்து , துரைசாமி கவியின் சொல்ல சொல்ல வன்மம் ஏனைய்யா பாடினார் தலைவர் , தொண்டர்கள் துதி செய்யும் சிவகிரி முருகனை அவை வணங்கியது . பல்லுயிர்கொரு ஒரு தாயகா , பழனி மலை நாயகனை நாம் மனதார் பெஹாக்கில் தொழுதோம். இந்த சீசனில் பரவாயில்லை பெஹாக் அடிக்கடி வந்து செல்கிறது . இந்த துரைசாமி கவியின் மார்கழி மஹுற்சவ தீம் கச்சேரி இன்னும் நினைவில் உள்ளது. அடியவர் மீது ஏன் உனக்கு இந்த கோவம் என்று இப்படி பெஹாக்கில் பாடினார் எப்படி கோவப்படுவார் முருகர்.
11) பாபநாசம் சிவனின் குறிஞ்சி ராக எங்கும் நிறைந்திருக்கும் என் தெய்வம் அடுத்து , சைவம் கச்சேரியில் மோலோங்க பாடினார் தலைவர். தங்கி மகிழ்ந்திடுவார் தயாளன் வரியில் தலைவரின் இசையில் கிறங்கினோம். மங்களமே தருவார் வரியில் அத்தனை அழகு , தினமும் மங்களமே தருவார் சஞ்சய் என்று மகிழ்ந்து அவை. வாரீர் அவன்தாள் புகழ்ந்து பாடுவோம் என்று தலைவர் அழைக்க அனைவரும் இணைந்தோம். கருணை மழை அரங்கில் உன்னதமாய் பெய்ந்தது.
12) அடுத்த விநாடி ஆச்சர்யம் காத்திருந்தது ஆம் மங்களம் புஜகசாயினோ மங்களம் , தலைவர் யதுகுலகாம்போதியில் பாடினார். அப்போது தான் உணர்ந்தோம் எப்படியோ ஸ்வாதி மாமன்னரை பாடுவது என் கொண்டு வந்து விட்டார் என்று. மிக ரம்மியமான மங்களம் தொடர்ந்து சௌராட்டிர மங்களமும் வந்திறங்கியது.
2.45 மணி நேர கச்சேரி மிக அழகாய் பாடப்பட்டது , அதிலும் முந்தைய இரவில் ஒரு பிரம்மாண்ட கச்சேரி தந்துவிட்டு அடுத்த நாளே இப்படி ஒரு கச்சேரி சஞ்சய்க்கு மட்டுமே சாத்தியம் என்றார் கோபாலகிருஷ்ணபாரதி , இன்னும் இரண்டு வைணவம் பாடியிருக்கலாம் என்று போகிற போக்கில் கூறிவிட்டு சென்றான் திருமலை. மதராஸ் வித்வத் சபை வைணவமா சைவமா பார்க்கலாம்.
Comments